Monday, March 19, 2012

                                                             திருட்டு ராஸ்கல்!


ஆகஸ்ட் மாதம், 2003 

மாணவர் விடுதி, முத்துகாளிபட்டி.



என் நண்பன் தோம்ப்சனின் முகத்தில் ஒரு பதட்டம், என்னிடம் சோகமாக வந்தான். தோம்ப்சன் என்னுடைய நண்பன், நான் விடுதில்யில் சேர்த்த முதல் நாளில் இருந்தே.. எனக்கு நினைவிருக்கிறது எனது வேதியியல் ஆசிரியர் அவனை மிகுந்த அன்புடன் ஜே ஜே தோம்ப்சன் என்று செல்லமாக அழைப்பார். அதை இப்பொழுது நினைத்தால் கூட என் மனதினில் ஒரு புன்னகை. சுட்டி தனத்தின் உச்ச கட்டம் தோம்ப்சன்..
அவனை பிடிக்காதவர்கள் யாவரேனும் உண்டோ என்ற ஐயம் என்னுள் பல முறை எழுந்துள்ளது. அவன் உயரத்திலே நான்கு அடி. மிகவும் நோஞ்சானாக இருப்பான். என் படுகை அருகிலே அவனது கட்டில்.  நாங்கள் எங்களை ஒருவரை ஒருவர் கேலி செய்த வாறே மகிழந்ததற்கு அளவே இல்லை என்று கூறினால் அது மிகை ஆகாது.  இருவரும் அடித்த லூட்டிக்கு அளவே இல்லை.

"என்னடா தொம்ப்சா  (ராகத்துடன்) ரொம்ப சோகமா வர ? "என்று கேட்டேன். 
அதற்கு அவன் 
"எவனோ ஒருத்தன் என்னோட ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வச்சிக்கிட்டு இருந்த பாத்ரூம் செருப்பை  'ஆட்டைய' போட்டுடாண்ட மாப்பிள" (திருடி விட்டான் என்பதை தான் அப்படி சொன்னான் என்பதை புரிந்து கொள்ள எனக்கு சில வினாடிகள் ஆயிற்று) .

எங்க போன என்ன ஆச்சு என்று கேள்வி அம்புகளை தொடுத்தேன்.

"அட சாப்பிடு முடிச்சுடு வந்து செருப்பு விட்ட இடத்துல தேடி பார்த்த செருப்பு இல்லடா" என்று புலம்பினான்.
செருப்பு தானே என்று அலட்சியமாக விட்டு விடலாம். அதுவும் பாரகன் ஜோடி செருப்புகள். இதில் என்ன நகைச்சுவை  என்றால் "யார் போயும் போயும் அந்த குட்டி புச்கன் செருப்ப திருடி இருப்பார்கள். மிகவும் சிறிய கால்கள் உடைய அவனோடைய செருப்பை என்ற யோசனை எனக்குள். 


"விடுட தொம்ப்சு ஒரு நாள் மாட்டாமலா போயிடுவன் அந்த திருட்டு ராஸ்கல்" என்று அவனை நான் தேட்றினேன். 

முன்று நாட்கள் ஓடின.....

தோம்ப்சன் அந்த செருப்பை விடுவது போல் இல்லை. தினமும் செருப்பை பறிகொடுத்த இடத்திலே செருப்பை தேடி கொண்டு இருந்தான்.

சட்டேன்று ஒரு மதியம் என்னிடம் வந்து செருப்பு கெடச்சிடுச்சுன்னு மெஸ்ஸில் என் காதிலே வந்து
ஒரு கூகூறல் இட்டான். எங்க எப்படி எவ்வாறு என்பதை ஆவலுடன் கை அலம்பும் இடத்தில நின்றவாறு கேட்டேன்.  "அதுல நான் சிவப்பு மார்கர்ல கிரிக்கி இருந்தேண்ட, அந்த திருடுப்பயன் அத கூட அலம்பாம வச்சுருகன் என்றான் சிரித்த வாறு.
தொம்ப்சு செருப்பு எங்க இருதுசோ அங்கேயே பொய் வச்சுட்டு வா. யாரு எடுத்தானு
பார்க்கலாம் என்று சொன்னேன். முதலில் அஞ்சிய அவன், பிறகு ஆர்வத்திலும் நான் அளித்த தைரியத்திலும் செருப்பை இருத்த இடத்திலே விட்டு வந்தான். சற்று நேரம் கழித்து சுண்டெலி போல் ஒருவன் அந்த செருப்பை நோக்கி வந்து அதை அணிய நினைத்தது.. 

"டாய், நில்ற என்று அவனை அதட்டிய குரலில் அச்சுருதினேன்."
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை என்பதை நான் அவனுடைய கண்களை பார்த்தவுடன் புரிந்து கொண்டேன். 

"யாரோட செருப்ப திருடிக்கிட்டு போற ?". அவன் முகத்தின் நிறம் மாறியது. 
"சொல்லுடா, ஊமையாடும் உம்முன்னு இருக்க ?" என்றான் தோம்ப்சன். 
"சொல்லுடா ஊமையாட்டும் உம்முன்னு நிக்கற. இது தொம்ப்சொனோட செருப்பு". அவன் தலைய சொரிய ஆரம்பித்து விட்டான். 

ஒரு நொடியில்  ஒரு முறை நானும் என்னுடைய தந்தையும் ஒரு சுண்டெலி ஒன்றை அடிக்க முடிவெடுத்து அதில் வெற்றியும் கண்டது என்னுடைய மழலை சம்பவத்தை நினைவுர்தியது. இந்த செருப்பை திருடியவனும் எனது கண்களுக்கு ஒரு சுண்டெலி போல் காட்சி அளித்தான். என்ன செய்வது என்பதை அறியாமல், மிகுந்த தடுமாற்றத்துடன் அணிந்த செருப்பை இருந்த இடத்திலே விட்டுவிட்டு மன்னிப்பு கேட்டான். பிறகு செய்த தவறுக்கான காரணத்தை கூறினான்.

"என்னோட செருப்பை யாரோ எடுத்துடாங்க, அதாங்க ..." 

"டாய் உன்னோட செருப்பை யாராச்சும் எடுத்துட்டா? அதுக்கு பதிலுக்கு இன்னொருத்தர் செருப்ப எடுப்பிய?. நீ வா நாம அர்ஜுன் சார் கிட்ட போலாம்" என்று மிரடினேன். ஒன்றும் சொல்லாமல் விடுதியை நோக்கி நடத்தான். 

'பேசிகிட்டே இருக்கறப்போ போரான்பாறு' என்று சொல்லி அவன் தலையை தட்டினான் தோம்ப்சன். பதிலுக்கு கோவம் கொண்ட அவன் தொம்ப்சனை பதிலிக்கு தலையினில் தட்ட பெருத்த சண்டையில் முடிந்தது. எவ்வளவு சொல்லியும், தடுத்தும் அவர்கள் தார் ரோட்டினில் கட்டி புரளுவதை என்னால் தடுக்க முடியவில்லை. 

அந்த வழியாக சென்ற அர்ஜுன் சார் "டை" என்று ஒரு குரல் எழுப்பியதும் சண்டை சமாதனம் ஆனது. நடந்த அனைத்தையும் நான் அர்ஜுன் சாரிடம் சொல்லி தொம்ப்சனுகாக வாதாடினேன். 

"ரெண்டு பேத்துக்கும் ஒன்னு முதுகுல போடணும்ட முதல.. இங்க வாங்க டா." ஒரு செருப்புககவா இப்படி அடிச்சிகிட்டிங்க? என்னோட செருப்ப கூட தான் எவனோ ஒருதான் அப்பேஸ் பண்ணிடன்".. நான் எவளோ ஜாலியா இல்லன்னு சொல்லிகிட்டே அந்த தோம்ப்சனின் காலணிகளை நோட்டம் விட்டார்.. நோட்டம் விட்ட பிறகு தொம்ப்சொனுக்கு ஒன்று விழுந்தது.. 

"தம்பி இது யாரோட செருப்பு" என்ற கேள்வியும் வந்தது..  

எனக்கு புரிந்தது அது தொம்ப்சொனோட செருப்பு இல்ல.. சார் ஓட செருப்பு என்று.. ஒரு பக்கத்தில் எனக்கு மயக்கமும் வந்தது.. 

2 comments:

  1. வலைப் பதிவகத்திற்கு வரவேற்கிறேன்!

    ReplyDelete